"இறைவனில் சங்கமம்" என்னும் திருவழிபாட்டு பாமாலை, லூர்து அன்னை
திருத்தலத்தை நம்பிக்கையோடு நாடி வருகின்ற திருப்பயணிகளின்
நீண்டகாலத் தேவையை நிறைவு செய்கின்றது. "ஒருமுறை பாடுவது இருமுறை
செபிப்பதற்கு சமம்" என்கிறார் புனித அகுஸ்தினார். எனவே, அருள்
வாழ்வில் வளர திரு இசையானது: இன்றியமையாததும், இறைவனோடு ஒன்றிக்க
பாடல் ஓர் அற்புதமான கருவி என்பதிலும், மாற்றுக் கருத்துக்கே
இடமில்லை.
திருவழிபாட்டில் பொருளுணர்ந்து பங்கேற்று, எல்லோரும் இணைந்து
பாடும்பொழுது, அது நம்மை இறை அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது.
இந்த இறையனுபவம் நம்மைக் கடவுளுக்கும், சமூகத்திற்கும் ஏற்றவர்களாகவும்
பிறர் நலப்பணிகள் ஆற்றும் தன்மையுடையவர்களாக வும் மாற்றுகின்றது.
ஆகவே திருவழிபாட்டுப் பாடல்களை இணைந்து பாடி, இறைவனைப்புகழ, நன்றி
செலுத்த, நமது ஏக்கங்களை இறைவனிடம் வெளிப்படுத்த, புதிய சமூகம்
உருவாக்கம் பெற, பெரிதும் உதவும் என்பது எனது அசையாத நம்பிக்கை.
இப்பாடல் புத்தகத்தில் தரமான, இனிமையான, பழைய, புதிய பாடல்கள்
தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களை எல்லாம் எழுதி இசையமைத்தவர்களுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள். சிறப்பாக இந்த பாமாலையை உவந்தளித்த
சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் இயக்குனர்: அருட்தந்தை.
டலிமா அடிகளாருக்கும், அச்சுப்பொறுப்பை தோளில் சுமந்த அருட்தந்தை
அகிலன் S.D.B. அடிகளாருக்கும்,
இப்பாடல் புத்தகம் முழுமைபெற முன்னின்றுழைத்த அருட்தந்தை. சின்னப்பன்
அ.ம.தி அடிகளாருக்கும், கணணிப்பணியில் உதவிய திருமதி. றெஜீனா
சிவகுமாரன் (பாரிஸ் - புனித சூசையப்பர் பாடகர் குழாமின்
முன்னாள் தலைவி) அவர்களுக்கும், அழகுற அச்சிட்டு வழங்கிய
யேம்ஸ் ஆட்ஸ் சிவகாசி அச்சகத்தார் அனைவருக்கும் எனது உளம்
நிறைந்த நன்றிகள்.
மேலும் இந்த கணணிப்பணியில் பாடல்களை
Mp3ல் தேடி எடுத்து பாடல்கள்
முழுமை பெற முன்னின்று உழைத்த திருமதி.றெஜினா செல்வநாயகம் அவர்களுக்கும்
எனது உளம் நிறைந்த நன்றிகள்.
இறைவனுக்கே புகழ்! மரியே வாழ்க!!
01-01-2017
என்றும் அன்புடன், ஆன்மீகக்குரு
அருட்தந்தை. லீனஸ் சொய்சா அ.ம.தி
லூர்து அன்னை திருத்தலம் - பிரான்ஸ்
இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்