Plerinage des tamouls Lourdes

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

புதிய ஏற்பாட்டு வினாடி விடை

விவிலியத்தை அறிவோம்

விவிலியம்
புதிய ஏற்பாடு
(1) மத்தேயு
(2) மாற்கு
(3) லூக்கா
(4) யோவான்
(5) திருத்தூதர் பணிகள்
 
              திருமுகங்கள்
(6) உரோமையர்
(7) 1 கொரிந்தியர்
(8) 2 கொரிந்தியர்
(9) கலாத்தியர்
(10) எபேசியர்
(11) பிலிப்பியர்
(12) கொலோசையர்
(13) 1 தெசலோனிக்கர்
(14) 2 தெசலோனிக்கர்
(15) 1 திமொத்தேயு
(16) 2 திமொத்தேயு
(17) தீத்து
(18) பிலமோன்
(19) எபிரேயர்
 
 பொதுத் திருமுகங்கள்
(20) யாக்கோபு
(21) 1 பேதுரு
(22) 2 பேதுரு
(23) 1 யோவான்
(24) 2 யோவான்
(25) 3 யோவான்
(26) யூதா
(27) திருவெளிப்பாடு
"Biblia" என்று கிரேக்க மொழியிலும் இலத்தீன் மொழியிலும், Bible என்று ஆங்கில மொழியிலும் குறிக்கப்படுகின்ற திருவிவிலியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். திருவிவிலியம் என்பது ஒரு வரலாற்று நூலோ அல்லது ஒரு அறிவியல் நூலோ அல்ல. இது விவிலித்தில் சொல்வப்பட்டிருக்கின்ற இறை மக்களின் விசுவாச வாழ்வை உள்ளடக்கிய, பிரதிபலிக்கின்ற, விசுவாசத்தில் வாழ வழிகாட்டுகின்ற நூலாகும். இந்த விசுவாச நூலின் மையப் பொருளாக கடவுள் எவ்வாறு மனிதரை அன்புசெய்தார் என்றும் அதன் பலனாக மனிதர் எவ்வாறு கடவுளன்பிலும் பிறரன்பிலும் வாழ அழைக்கப்ட்டனர் என்பதையும் விரிவாக எடுத்துக் கூறும் நூல். சுருக்கமாக கடவுளின் மீட்புத்திட்டத்தில் மனிதர் எவ்வாறு பங்குபெற்று மீட்ப்புப் பெறலாம் என்பதை கூறும் மாண்பு மிக்க நூல்.

உலகத்திலேயே திருவிவியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயற்கப்பட்டு அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திருவிவிலியமானது இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுகிறது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு.

பழைய ஏற்பாடானது கடவுள் எவ்வாறு இஸ்ரேயல் மக்களை அன்புசெய்து வழிநடத்தினார் என்பதையும் அதற்கு இஸ்ரேயல் மக்கள் எவ்வாறு பதிலன்பு செய்தார்கள் என்பதையும் உடன்படிக்கை, மற்றும் இறைவாக்கினர்கள் வழியாக கடவுள் மனிதருக்குத் தந்த மீட்புத் திட்டத்தையும் விளக்கிக் கூறும் நூல்களை உள்ளடக்கியது.

புதிய ஏற்பாடானது, கடவுள் எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார் என்பதையும், மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பல்வேறு போதனைகள், சிந்தனைகள், செயல்கள் மனிதருக்கு எவ்வாறு மீட்ப்பைக் கொண்டுவந்தன என்பதையும், புனித பவுல் எவ்வாறு ஆதி கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ விசுவாசத்தில் வழிநடத்தினார் என்பதையும், திருவெளிப்பாடு என்னும் நூல் வேத கலாபனை ஏற்பட்ட காலத்தில் அந்த மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய எண்கள், அடையாளங்கள் வழியாக அவர்களை விசுவாசத்தில் வாழ, வளர புனித யோவான் அவர்களை எவ்வாறு உற்சாகப்படுத்தினார் என்பவற்றை கூறும் நூல்களை உள்ளடக்கியது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பயன்படுத்தும் விவிலியமானது கிரேக்க மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட 46 பழைய ஏற்பாடு நூல்களைக் கொண்ட 39 'திருமுறை' நூல்களையும் மற்றும் 7 இணைத் திருமுறை நூல்களையும் உள்ளடக்கியதாகும். இதில் பிரிவினைச் சபையினர், 'திருமுறை' நூல்கள் என்று ஏற்றுக்கொள்ளாத 7 நூல்களும் உள்அடங்கும். அவை: தோபித்து, யூதித்து, சாலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம், பாரூக்கு, 1,2 மக்கபேயர் மற்றும் எஸ்தர் இணைப்பு (10;4 - 16;24) தானியேல் இணைப்பு (3;24 - 90, 13-14). கத்தோலிக்கர் இந்த நூல்களை இணைத் திருமுறை நூல்களாக அழைக்கின்றனர். பிரிவினைச் சபையினர் பயன்படுத்தும் திருவிவிலியத்தில் பழைய ஏற்பாடானது எபிரேய மூல மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நூல்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த மொழிபெயர்ப்பில் மேற்கன்ட 7 நூல்களும், இணைப்புக்களும் இடம்பெறவில்லை. கத்தோலிக்கர், பிரிவினைச் சபையினர் பயன்படுத்தும் புதிய ஏற்பாட்டில் எந்தவித வேறுபாடுமின்றி 27 நூல்களை உள்ளடக்கியது.









     

அன்னையே எனக்கொரு வரம் அருள்வாய்! லூர்துமலை நாயகியே அருள்புரிவாய்!