Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் இறைகுலமே குருகுலமே  

இறைகுலமே குருகுலமே இணைந்து வாருங்கள்
இறைவனின் இல்லத்திற்கு விரைந்து வாருங்கள்
கல்வாரியின் பலியினில் கலந்திட வாருங்கள்
காக்கும் தேவனுக்கு நன்றி கூற வாருங்கள்

அழைப்பை ஏற்று பின்தொடர வாருங்கள்
கிறீஸ்துவின் சாட்சியாய் வாழ வாருங்கள்
வருகவே வருகவே பீடம் நோக்கி வருகவே
ஓர் குலமாய் ஓரிடமாய் ஒன்று சேரவே வாருங்கள்

அழைப்பை ஏற்று பின் தொடர வாருங்கள்
அகம் திறந்து இயேசுவை ஏற்றுக் கொள்ள வாருங்கள்
கிறீஸ்துவின் சீடனாய் அழைக்கப் பெற்றோர் வாருங்கள்
கிறீஸ்துவின் சாட்சியாய் வாழ வாருங்கள் - 2
மானிடரின் மீட்புக்காக மனுக்குலத்தின் வாழ்வுக்காக
தன்னையே பலியாக்கிய இயேசுவை
காண வாருங்கள் காண வாருங்கள்
வருகவே வருகவே பீடம் நோக்கி வருகவே
ஓர் குலமாய் ஓரிடமாய் ஒன்று சேரவே வாருங்கள்

ஆவியால் அழைக்கப்பெற்றோர் வாருங்கள்
இறையேசுவின் ஊழியனாய் மாறிடவேவாருங்கள்
வரங்களையும் கனிகளையும் பெற்றிடவே வாருங்கள்
அபிசேக ஒளியினில் வாழ வாருங்கள் - 2
உலகம் எல்லாம் சென்றிட நற்செய்தி பரப்பிட
திருமுழுக்கு கொடுத்திட இயேசுவில்
வாழ வாருங்கள் வாழ வாருங்கள்
வருகவே வருகவே பீடம் நோக்கி வருகவே
ஓர் குலமாய் ஓரிடமாய் ஒன்று சேரவே வாருங்கள்






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்