190) வருகின்றேன் இயேசுவே |
வருகின்றேன் இயேசுவே உன்னைக் காண வருகின்றேன் கரங்கள் நீட்டி வரங்கள் கேட்டு வருகின்றேன் உன் கருணையிலே வாழ்ந்திட நான் வருகின்றேன் உன் அன்பை அறியாமலே வாழ்ந்திருந்தேன் இறைவா உளம் நொந்து மன்னிப்புப் பெற வருகின்றேன் வாழ்வினிலே வசந்தம் சேர்க்கும் வார்த்தை நாளும் கேட்டு வாயார உன்னோடு உறவாட வருகின்றேன் திருப்பலியை உன்னோடு சேர்ந்தளிப்பேன் இறைவா திருவுணவை மனமகிழப் பெற வருகின்றேன் உன்னோடு எந்நாளும் உயிர் வாழ்ந்து நானும் உலகெங்கும் உன் நாமம் தினம் பாட வருகின்றேன் |