வருகைப்பாடல்கள் | நித்தம் ஒரு புத்தம் புது |
நித்தம் ஒரு புத்தம் புது விடியல் காணுவோம் நீதி தேவன் தந்த வாழ்வின் பலி ஒன்றாய் கூடுவோம் உள்ளமவர் இல்லமதில் மாற்றம் காணுவோம் என்றும் காக்கும் அன்பு தேவனவர் பாதம் நாடுவோம் வாருங்கள் புகழ் பாடுங்கள் அவர் அன்பில் வாழுவோம் (4) கருவினில் நம்மை தேர்ந்து அழைத்ததும் கரத்தில் நம்மை பொறித்து வைத்ததும் இறைவன் கொடையன்றோ - (2) பகிர்வினில் உள்ளம் நிறைவு காணவும் பாரினில் நாமும் சான்று பகிரவும் அழைக்கும் பலியன்றோ - (2) நல் ஆயன் வழியில் சொல்வோம் அவர் அன்பின் அரசில் மகிழ்வோம் அடிமை விலங்கினை முற்றும் வளர்க்கவும் சமத்துவ அன்பை எங்கும் காணவும் உணர்த்தும் பலியன்றோ மனங்களில் முழு மாற்றம் காணவும் மண்ணிலே இறை மனிதம் வளரவும் அழைக்கும் பலியன்றோ - (2) நல் ஆயன் வழியில் சொல்வோம் அவர் அன்பின் அரசில் மகிழ்வோம் |