Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

    84) இறையாட்சியின் தீபங்களே
 


இறையாட்சியின் தீபங்களே
இறை மைந்தனின் தோழர்களே (2)
வாருங்கள் ஒன்றாய்க் கூடுங்கள்
வாழ்வதன் அர்த்தம் காணுங்கள் (2)
தன் வாழ்வை பலியாக்கிய நம் தலைவர் இயேசுவின் - 2
அடிச்சுவட்டில் அடியெடுத்து அகிலம் ஒரு குடும்பமாக

மனித வாழ்வு முழுமையிலே இறைமை சிரிக்குமே
அன்பு இறை மனித சமுதாயம் உதயமாகுமே - 2
சோர்ந்து வீழும் ஏழையரை வாழ வைக்கவே இயேசு
இயக்கமாக நம்மையெல்லாம் ஒருங்கிணைத்தாரே - 2

அன்பு நெறியில் நாம் நடக்க அமைதி பிறக்குமே
புதிய உறவின் கீதம் இணைந்து பாட உலகு சிறக்குமே - 2
ஜாதி மத பெயரில் எழும் வன்மை அழிக்கவே - இயேசு
சரிசமமாய் இணைந்து வாழக் கற்றுத் தந்தாரே - 2





 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்