11) அழைக்கப்பட்டோர் |
அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர் ஆலயம் ஒன்றாய் வருவோமே பலிதனிலே திருப்பலிதனிலே திரளாய்க் கலந்து மகிழ்வோமே நம்நாதர் யேசு நம்மிடையே வருவார் (2) நாமெல்லாம் ஒன்றாய் ஜெபித்தாலே நான் உன்னைக் கைவிடுவதில்லை நான் உன்னை மறப்பதுமில்லை என்றுரைத்த யேசு நம்மிடையே இருக்க கலக்கமின்றி கவலையுமின்றி ஆலயம் நுழைந்திடுவோம் - திருப் பலிதனில் கலந்திடுவோம் நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணிபோல் உன்னைக் காப்பேன் என்றுரைத்த யேசு நம்மிடையே இருக்க அச்சமுமின்றி அதிர்ச்சியுமின்றி ஆலயம் நுழைந்திடுவோம் - திருப் பலிதனில் கலந்திடுவோம் |