120) உன்னோடு புது உறவு |
உன்னோடு புது உறவு கொள்ள பலிப்பீடம் வருகின்றோம் வரமொன்று தந்து வளம் காண அருள் வேண்டும் இயேசுவே சுப ராக கீதம் ஒன்று இசைத்தோமே நாமும் இன்று வரவேண்டும் பலியிலே நாளும் (2) புதுவிடியல் புலருமென்று இயேசுவே காத்திருந்தோம் இன்று உன் பலியின் நினைவுகளால் உள்ளமே மகிழ்ந்திருந்தோம் (2) உதவிக்கரம் இருக்குமென இறையுனைச் சார்ந்திருந்தோம் இறையரசின் மாண்புகளால் - மனதினில் ஆனந்தம் வாழ்வினில் பேரின்பம் புதுவாழ்வு மலருமென்று இறையுனை நம்பி நின்றோம் இன்று உன் பலியில் கலந்திடவே மலர்பாதம் நாடி வந்தோம் (2) மழைக்கால மேகம் கண்ட மயிலாய் சிலிர்த்து நின்றோம் பெயர் சொல்லி அழைத்திடுவாய் - மனதினில் ஆனந்தம் வாழ்வினில் பேரின்பம் |