Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் இணைந்து வாருங்கள்  

ஆ...ஆ...ஆ...ஆ....ஆ...ஆ...ஆ...ஆ....

இணைந்து வாருங்கள் மகிழ்ந்து கூடுங்கள்
இறைவன் பலியில் கலந்திட விரைந்து வாருங்கள் -2

வாருங்கள் வாருங்கள் இறைகுலமே வாருங்கள்
கால தேவன் பலியினில் கலந்திடவே வாருங்கள் - 2


அன்பின் வழி அருளின் வழி நாளும் நடந்திட
உண்மை பலி தியாகப் பலி உறவினில் இணைவோம்- 2
சுமை நீங்கி இங்கு சுகம் காண கூடுவோம்
பொருள் வாழ்வை நீக்கியே அருள் வாழ்வைத் தேடுவோம்
இதயத்தில் இறைவனை நாளும் ஏற்று மகிழ்ந்து வாழ


இறை அரசு நாள்தோறும் செழித்தோங்கிட இறைபலியில்
இறைவனின் துணை தினம் வேண்டுவோம் - 2
அன்பில் நாமும் இணைந்து குடும்பமாக மலர்வோம்
அகிலமெங்கும் இறைவனின் சாட்சியாக வாழ்வோம்
ஆறுதல் வழங்கிடும் அன்பர் இயேசு










 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்