Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   170) புலர்ந்ததே புது வானம்  



புலர்ந்ததே புது வானம் புதிதாய் ஒருபூமி
புனித தேவனின் ஆலயம்
புது வாழ்வின் அழைப்பாகவே 2
அப்பா அன்பான தெய்வமே உம்மை
ஆராதித்தோம் துதித்தோம்

கனவாய் நின்ற காட்சிகள் - இன்று
நனவாய் மாறியதே
கனலாய் தேவ ஆவியின் - அருள்
பிரசன்னம் பரவிடுதே -2
புனலாய் ஆலய வலப்புறமிருந்து
புதுவாழ்வு பொங்குதே அதன்
கறையில் வாழ்வோர் காலங்களெல்லாம்
கனி தந்து வாழ்வதே
அப்பா அன்பான

கிழக்கே காணும் வாசலில் - நல்
நம்பிக்கை உதிக்கின்றதே
அழைக்கும் தந்தை பாசத்தில் - நம்
ஆன்மா களிக்கின்றதே 2
இசைப்போம் இன்னிசை யாழினை மீட்டி
இறைவனின் மாட்சியை நாம்
இசைப்போம் அவர் தம் இயக்கத்தின்படியே
இடர் நீங்கி ஓங்கவே
அப்பா அன்பான....
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்