8) அழைக்கும் இயேசு அமைக்கும் |
அழைக்கும் இயேசு அமைக்கும் பாதையில் அனைவருமே சென்றிடுவோம் இறைவனின் அழைப்புக்கள் எல்லாம் சமமே அழைத்தவர் அருகில் வாழ்வது சுபமே எவ்வழி நல்வழி என்பதை அறிய திருப்பலி தனிலே தேவனின் அழைப்பை தினமும் பெற்று மனங்கள் மகிழ மன்னவன் வழியில் வாழ்ந்திட வருவோம் அவரையே உண்டு அவரிலே வாழ ஆண்டவர் அழைப்பை அன்புடன் ஏற்போம் அரும்பலிதனிலே ஆயனின் ஒளியில் அவர் வழியவரோடவரில் இணைவோம் அன்பின் பாதை எங்கும் அமைய அன்பின் உருவாய் உலகில் உயர்வோம் - 2 |