வருகைப்பாடல்கள் | ு |
குடும்பம் குடும்பமாய் இறைசமூகமாய் இறைவன் இயேசுவில் இணைய வாருங்கள் சமமான பந்தியில் பங்கேற்க வாருங்கள் இயேசுவின் இறப்பு உயிர்ப்பைக் கொண்டாட வாருங்கள் வறுமை வெறுமை சிறுமையான இல்லங்களையும் உடைந்து உலர்ந்து நலிந்து போன கரங்களையும் கனவு நனவு காட்சியான எண்ணங்களையும் வாதித்த சாதித்த சோதித்த நபர்களையும் கொண்டு வருவோம் கொண்டாட வருவோம் இயேசுவின் இறப்பு உயிர்ப்புக் கொண்டாட்டம் கவலை சோர்வு சோக மௌன முகத்தினையும் இழப்பு சகிப்பு தவிப்பான உலகினையும் பிறப்பு இறப்பு புதிரான நிகழ்வினையும் பெற்றோர் பிள்ளைகள் நட்பான உள்ளங்களையும் கொண்டு வருவோம் கொண்டாட வருவோம் இயேசுவின் இறப்பு உயிர்ப்புக் கொண்டாட்டம் |