103) இறைவா வந்தேன் |
இறைவா வந்தேன் உன்னில்லம் மன நிறைவைக் கண்டது என் உள்ளம் என்றென்றும் நான் உந்தன் சொந்தம் ஓடி வருகின்றேன் தேடி உன் பாதம் இறைவா வந்தேன் உன்னில்லம் உழைத்து சேர்ந்திடும் புகழெல்லாம் முடிவில்லா வாழ்வைத் தந்திடுமா - 2 சுமைகளால் சோர்ந்திட்ட மனங்களுக்கு அமைதியை உலகம் அளித்திடுமா அழைக்கும் இறைவன் துணை கேட்போம் ஆண்டவன் பாதம் அமர்ந்திடுவோம் - 2 அவர் மொழி கேட்டு வாழ்ந்திடுவோம் தெய்வீக வாழ்வை அமைத்திடுவோம் வறியவர் வளமுடன் வாழ்ந்திடவும் வாழ்வோர் வறுமை உணர்ந்திடவும் - 2 உன் திருப்பீடத்தில் அனைவருமே ஓர்குலம் என்பதை உணர்ந்திடவும் பலியினை அல்ல நல் மனதினையே மகிழ்ந்தளித்தேன் திருப்பலியினிலே - 2 இறைவனின் விருப்பம் நான் ஏற்று தொடர்வேன் வாழ்வுப் பலியினையே |