145) தோழமை உறவில் புதுவுலகமைப்போம் |
தோழமை உறவில் புதுவுலகமைப்போம் அனைவரும் வாருங்கள் தோழர்களாக இணைந்து வாழ புறப்படுவோம் வாருங்கள் - நம் யேசுவின் குடும்பம் ஒன்று நாம் யாவரும் இணைவது நன்று ஓர் குலமாக ஓரணியாக ஓன்றி வாழ்ந்திடுவோம் தெய்வம் தந்த பூமி தன்னில் அன்பை விதைப்போம் வார்த்தை சொல்லும் நெறிதனில் பாதை அமைப்போம் உண்மை அன்பு நீதி வாழும் இன்ப ஆட்சி உலகினில் நிலை பெறவே உருக்கொடுப்போம் தேவன் தந்த வேதம் தன்னை வாழ்வில் சுவைப்போம் இறைமனித உறவினில் என்றும் வளர்வோம் சாதி சமய பேதம் மாறும் புதிய வாழ்வு மானிடர் பெற்றிடவே உழைத்திடுவோம் |