Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   83)இறைவன் ஆட்சி மண்ணில்  




இறைவன் ஆட்சி மண்ணில் மலர
இதயம் மகிழ்ந்து பகிர்ந்து வாழ
ஆயனாய் அன்பனாய் நம்மை அழைக்கின்றார்
வாருங்கள் கூடுங்கள்
அன்பில் நனைய அருளில் வளர சேருங்கள்

ஏழை மாந்தர் ஏற்றம் காண இறைவன் அழைக்கின்றார்;
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
எழுச்சி வாழ்வை பிறரில் விதைக்க அவரே விழைகின்றார்;
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
விழுகின்ற மனிதமும் அழுகின்ற இதயமும்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
வாருங்கள் கூடுங்கள்
அன்பில் நனைய அருளில் வளர சேருங்கள்

வார்;த்தையான தேவன் இன்று வாழ்வில் இணைகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
வளமை நிறைந்த குருதிதனை பருகத் தருகின்றார்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
நலிந்திடும் மனிதமும் நொறுங்கிடும் இதயமும்
ஆலயம் வாருங்கள் அன்பு தேவன் பாருங்கள்
வாருங்கள் கூடுங்கள்
அன்பில் நனைய அருளில் வளர சேருங்கள்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்