182) மனங்களை ஏந்தியே |
மனங்களை ஏந்தியே வருக வருக இறைகுலமே மறைபொருள் பலியினில் வருக வருக இறைகுலமே மனங்களை ஏந்தியே மறைபொருள் பலியினில் வருக வருக இறைகுலமே அருள் பெறுக பெருக திருக்குலமே இறைமகன் வரவினில் மனுக்குலம் மீண்டது இருள் திரை அகன்றது புது ஒளி புலர்ந்தது இனி நல்வாழ்வு என்று இதயமும் மகிழ்ந்தது வருக வருக வருக இறை குலமே அருள் பெறுக பெருக திருக்குலமே மனது சோர்ந்து தளர்ந்த மனிதர் அனைவரும் வருவீர் இனிய உலகம் தேடும் பயணம் இன்று தொடங்கிடட்டும் மனித சுயநலம் மறைய வேண்டுமே புனித உறவுகள் மலர வேண்டுமே ஆதித்திருச்சபை அடைய வேண்டுமே அன்பில் யாவரும் வளர வேண்டுமே அனைத்தும் அனைவர்க்கும் சமமென ஆகிட வருக வருக வருக இறைகுலமே அருள் பெறுக பெறுக திருக்குலமே வறுமை சுமந்து வாடி நின்றோர் வல்லமை பெறுவார் உறவு கசந்து வெறுமை உணர்வோர் ஆறுதல் அடைவர் தொழுது பணிவுடன் வந்து வணங்கினோம் மீட்பின் ஒளியினில் தினமும் இணைந்திட எழுந்த தெய்வமே எங்கள் நாதனே தொழுது பணிவுடன் வந்து வணங்கினோம் அனைத்தும் அனைவர்க்கும் சமமென ஆகிட வருக வருக வருக இறை குலமே அருள் பெறுக பெறுக திருக்குலமே |