Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   83)1) இறைவன் வாழும் இல்லம்  


இறைவன் வாழும் இல்லம் என்பது
ஆலயமாம் ஆலயமாம் - இங்கு
இறைமக்கள் யாவரும் இணைந்து வருவது
ஆனந்தமாம் ஆனந்தமாம்
நாம் இறைவன் தெரிந்த புது இனம்
இறை அரச குருத்துவ திருக்குலம் (2) இந்த
உண்மை நானிலம் முழுவதும்
பரவணும் அன்பு மலரணும் (2)

மனம் தேடும் இறைவனைத் தினம் தோறும் காண
மாண்புறு ஆலயம் இருக்கின்றது ( 2 )
இறைமலர் பாதம் தொழுது பணிகின்றபோது
நம் உள்ளம் ஆலயம் ஆகின்றது (2)
இறை ஆவி குடிகொள்ளும் உயிருள்ள ஆலயம்
என்றைக்கும் நாம் தானே (2) - இந்த
சிந்தனை தேன் தானே.

கரம் கூப்பி இறைவனை ஜெபிக்கின்ற வேளை
பாரங்கள் நம் நெஞ்சில் குறைகின்றது - 2
அவர் வரம் வேண்டி எல்லோரும் மன்றாடும்போது
நம் வாழ்வு அருளாலே நிறைகின்றது
இறை ஆவி குடி கொள்ளும் உயிருள்ள ஆலயம்
என்றைக்கும் நாம் தானே - 2 இந்த
சிந்தனை தேன் தானே.


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்