Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள்  புனித நாளும் பிறந்தது  


புனித நாளும் பிறந்தது
புதிய மலரும் மலர்ந்தது
இதய மலர்கள் மலர இன்று இறைவன் பீடம் செல்வோம்
இறைவன் ஆசி பெறுவோம் - நாம்
இறைவன் ஆசி பெறுவோம்

கடந்த காலக் கவலைகள் கரையட்டும் - கரையட்டும்
கண்ணீரின் கனவுகளும் கலையட்டும் - கலையட்டும்
மகிழ்வின் காலமிது மறையட்டும் சோகமது (2)
மன்னன் இயேசு நம்மை அழைக்கின்றார்
மலர்ந்த வாழ்வை நம்மில் தருகின்றார்
சோக கீதம் நமக்கு இல்லை ஆனந்தம் வாழ்வில் தங்கிடவே

வேற்றுமை வெறுப்புகள் ஒழியட்டும் - ஒழியட்டும்
பாசமும் நேசமும் வளரட்டும் - வளரட்டும்
நன்றி நினைத்திடுவோம் நன்மை செய்திடுவோம் (2)
புதிய பாதை உதயமாகட்டும்
வெற்றிப் பாதை நமது ஆகட்டும்
சோக கீதம் நமக்கு இல்லை ஆனந்தம் வாழ்வில் தங்கிடவே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்