வருகைப்பாடல்கள் | இறைகுலமாக இறைவனின் பலியில் |
இறைகுலமாக இறைவனின் பலியில் இணைந்திட வாருங்களே திருக்குலமாக தேவனின் திருவடி தொழுதிடக் கூடுங்களே இதயங்கள் மலர்ந்திட ஆலயம் வருவோம் உறவுகள் வளர்ந்திட இயேசுவை பகிர்வோம் புதுஉலகம் படைப்போம் - நம் இயேசுவின் வழி நடப்போம் வேற்றுமை மறைந்திட மனிதங்கள் செழித்திட தன்னுயிர் தந்தாரே பகிரா மனமே பதரா மனிதா பகர்ந்திடச் சொன்னாரே உதவிடும் கரத்தில் உயிர்த்தேன் நாளும் உணர்ந்திடு என்றாரே உன்னையே இழந்தால் நீயும் காண்பாய் உயிர்ப்பினை என்றாரே வாழ்ந்திட வளர்ந்திட வந்திடு மனிதா தேவன் நம்மோடு அழிந்திடும் உலகின் பொருளைத் தேடி அலைந்திடும் மனிதா நீ அன்பு ஒன்றே எல்லா நாளும் நினைத்திடு மனிதா நீ இன்று மடியும் புல்லின் வாழ்க்கை புரிந்திடு மனிதா நீ வாழும் காலம் இயேசுவில் வாழ்ந்தால் விண்ணகம் சமைப்பாய் நீ இணைந்திட இணைந்திட தோள் கொடு தோழா தேவன் நம்மோடு |