| வருகைப்பாடல்கள் | எளிமை பணிவு அன்பு |
|
எளிமை பணிவு அன்பு ஆயர் சிங்கராயன் எளிமை பணிவு அன்பு அதுதான் சிங்கராயன் நல்மேய்ப்பர் நீரல்லவா அன்பே உன் மொழியல்லவா மக்கள் ஆயரே மக்கள் ஆயரே மக்கள் ஆயரே வாழ்க வாழ்கவே ஈர நெஞ்சம் எப்போதும் ஏழைக்கென்றால் இப்போதும் எம் வாசல் வரை வந்தாய் கரை சேரா துணை நின்றாய் குறையொன்றும் இல்லாத கோபுரமே பைக்கில் பயணம் செய்த ஆயன் நீ மட்டுமே பைக்கில் முழங்கும் சிம்மக் குரலும் நீ மட்டுமே பதவியை அத்து வழியும் ஆற்றல் உனில் மட்டுமே உனில் மட்டுமே உன்போல ஆயன் இனி வருமோ இந்நிலம் அழுவதும் புரிந்திடுமோ புரிந்திடுமோ மக்கள் ஆயரே மக்கள் ஆயரே மக்கள் ஆயரே வாழ்க வாழ்கவே கோபமுகம் பார்த்ததில்லை கோடிகளில் உமக்கு நாட்டமில்லை அனைவர்க்கும் நிறைவாழ்வு அதுவே உம் பணி வாழ்வு அன்புருவே எங்கள் அருங்கொடையே ஆட்டை அன்பு செய்யும் சிங்கம் நீ மட்டுமே குணத்தில் பத்தரை மாற்றுத் தங்கம் நீ மட்டுமே காயத்தை நாணச் செய்யும் நேயம் உனில் மட்டுமே உனில் மட்டுமே உன்போல ஆயன் இனி வருமோ இந்நிலம் அழுவதும் புரிந்திடுமோ புரிந்திடுமோ மக்கள் ஆயரே மக்கள் ஆயரே மக்கள் ஆயரே வாழ்க வாழ்கவே |