Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  72 ) இறைமக்கள் அகமகிழ்ந்து  


இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி
திருச்சபை இணைந்து கிறீதுவோடு தருமே தியாகப்பலி
வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே (2)

மலருடன் சேரும் யாவுமே
மணம் பெற்று வாழ்தல் நீதியே
புவி வாழ்வை நாமும் தரவே
இறைமாண்பை இன்றே பெறவே
விரைவோம் தருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம்

மகிழ்வுடன் பாடும் வேளையே
மனங்களில் சோர்வை நீக்குமே
திருவாழ்வைத் தேடிப் பெறுவோம்
மறை வாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய்க் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்