37) ஆனந்த மலர்களாக |
ஆனந்த மலர்களாக அன்பியம் மலர வேண்டும் ஆவியின் கொடைகள் அனைத்தும் அகிலத்தை நிரப்பவேண்டும் மானுட நேயங்கள் மண்ணில் மலர வேண்டும் (இந்த) - 2 விசுவாசம் அன்பு நம்பிக்கை என்னும் கடவுளின் கொடைகளில் - அதில் அன்பொன்று மட்டும் இறைவனின் வழியில் அகிலத்தை ஆளுமே (2) விண்ணவரின் அன்பின் அரசு மண்ணவரில் நிலைக்க வேண்டும் (2) புனித பூபாளம் இசைத்திட இணைவோம் வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம் - 2 சாதிகள் மறைந்து பேதங்கள் ஒழிந்து நம்பிக்கையில் நிலைத்திட - பிறர் குறைகளை மறந்து குற்றங்களை மன்னித்து சமத்துவம் காணுவோம் (2) விண்ணவரின் அன்பின் அரசு மண்ணவரில் நிலைக்க வேண்டும் (2) புனித பூபாளம் இசைத்திட இணைவோம் வாழ்க அன்பியம் நிறைவாழ்வின் கேடயம் - 2 |