Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   110) உம் திருப்புகழ் பாடியே  
உம் திருப்புகழ் பாடியே உம் பீடம் வருகின்றோம்
உம் இதயக் கோவில் தன்னில் குடியிருக்கவே
எம் கரங்களை உயர்த்தியே உம் பாதம் பணிகின்றோம்
எம் இறைவா என்றும் நீர் எம்மைக் காப்பதால்

கருணை தெய்வம் உன்னில் என்னை காணவிழைகின்றேன்
கர்த்தர் இயேசு என்றும் உம்மைக் கூவி அழைக்கின்றேன் (2)
கள்வனைப் போல் உம்மை நான் இகழ்ந்தாலும் (கெட்ட) - 2
கண்ணிமை போல என்றும் எம்மைக் காக்கின்றாய்

அன்புக்காக ஏங்கி அலையும் இதயம் தன்னையே
அன்பினால் ஆட்கொண்டு ஆளும் தலைவனே (2)
அருளும் உம் அன்பினை நான் மறந்தாலும் (தினம்) - 2
அருட்கரம் நீட்டி என்னை அரவணைக்கின்றாய்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்