வருகைப்பாடல்கள் | இறையாட்சி மண்ணில் மலர |
இறையாட்சி மண்ணில் மலர இன்று இறைவன் மண்ணில் பிறந்துள்ளார் இறையாட்சி நம்மில் வளர இன்று இயேசு மனுவாய் பிறந்துள்ளார் திருப்பலி இணைவோம் இறைகுலமே...2 திருப்பலியை நம் வாழ்வாக்குவோம் திருப்பலியை நாம் வாழ்வாக்குவோம் HAPPY HAPPY CHRISTMAS MERRY MERRY CHRISTMAS HAPPY HAPPY MERRY CHRISTMAS....2 கடவுளின் வார்த்தை அவர்... கடவுளோடிருந்த வார்த்தை அவர் கடவுளாய் இருந்த வார்த்தை அவர் அந்த வார்த்தை இன்று மனுவானார் அடைப்பட்ட மோட்சத்தை திறந்திட இன்று கடவுள் மனிதனானார் அறுப்பட்ட உறவை சேர்த்திட இன்று கடவுள் ஏழையானார்.. ஒளி இழந்த மனிதன் மீட்பு பெற...2 அரசர் அடிமையானார் திருப்பலி இணைவோம் இறைகுலமே திருப்பலியை நம் வாழ்வாக்குவோம் திருப்பலி இணைவோம் இறைகுலமே திருப்பலியை நாம் வாழ்வாக்குவோம் பல்லாயிரம் ஆண்டுகளாய் ஆண்டவர் ஆயத்தம் செய்திருந்தார் ஆபரகாம் குலவழியில் மெசியா பிறந்திட வழி செய்தார் ஏக்கத்தில் ஏங்கிட்ட அனைவரும் மெசியா பிறந்ததில் மகிழ்ச்சி கண்டார் செபத்திலும் தாபத்திலும் வாழ்ந்தோர் மீட்டர் பிறந்ததில் நிறைவு கண்டார்.. ஒளி இழந்த மனிதன் மீட்பு பெற...2 அரசர் அடிமையானார் திருப்பலி இணைவோம் இறைகுலமே திருப்பலியை நம் வாழ்வாக்குவோம் திருப்பலி இணைவோம் இறைகுலமே திருப்பலியை நாம் வாழ்வாக்குவோம். இறையாட்சி மண்ணில் மலர இன்று இறைவன் மண்ணில் பிறந்துள்ளார் இறையாட்சி நம்மில் வளர இன்று இயேசு மனுவாய் பிறந்துள்ளார் திருப்பலி இணைவோம் இறைகுலமே...2 திருப்பலியை நம் வாழ்வாக்குவோம் திருப்பலியை நாம் வாழ்வாக்குவோம் HAPPY HAPPY CHRISTMAS MERRY MERRY CHRISTMAS HAPPY HAPPY MERRY CHRISTMAS....2 |