Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் இதயங்கள் மலரட்டுமே  


இதயங்கள் மலரட்டுமே - இங்கு
இன்னிசை முழங்கட்டுமே - நம்மில்
இறையருள் வளரட்டுமே அது
இகமெல்லாம் பரவட்டுமே

அண்ணலே இங்கு நம்மை அழைத்தார் - இம்
மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார்
வரையில்லா வரங்களை நமக்களித்தார் தன்
கரையில்லாக் கருணையால் நமை மீட்டார்

அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது
குன்றின் மேல் ஒளிர்கின்ற திரு விளக்காம்
நீதியும் உண்மையும் அதன் சுடராம் - அவை
தீதில்லா வாழ்வுக்கு சான்றுகளாம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்