24) அன்பே உன் திருவடி |
அன்பே உன் திருவடி சரணமையா அருட்பெரும் ஜோதியே எமை நீ ஆள வா அன்பே உன் திருவடி சரணமையா பாருலகெல்லாம் படைத்தவா உன்னை பாமலர் தூவி வாழ்த்த வந்தோம் அக இருள் நீக்கும் ஆருயிர் தெய்வமுன் திருவருள் தேடி ஆட வந்தோம் - 2 வான் மழைபோலவே தேடியே பொழியும் நான்மறை போற்றும் நல்லிறைவா விண்ணும் மண்ணும் கடலும் மலையும் காற்றும் ஊற்றும் உள்ளவரை உன் நாமம் என் நெஞ்சம் பாடிடுமே படைப்போடு கைகோர்த்து நாட்டியங்கள் ஆடிடுவோம் ஆருயிர்க்கெல்லாம் அன்பினைப் பொழிந்து அணைக்கும் இதயம் உனதல்லவா எம்மீது கொண்ட பாசத்தின் விளைவாய் கல்வாரி சென்றதும் நீயல்லவா எம் கறை நீக்கி தூய்மையை வழங்கிய உத்தமர் உன்னைத் தொழுகின்றோம் விண்ணும் மண்ணும் கடலும் மலையும் காற்றும் ஊற்றும் உள்ளவரை உன் நாமம் என் நெஞ்சம் பாடிடுமே படைப்போடு கைகோர்த்து நாட்டியங்கள் ஆடிடுவோம் |