Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   99) இறைவா உம்மை  



இறைவா உம்மை புகழ்ந்திடவே
இறைமக்கள் இணைந்து வருகின்றோம்
தலைவா உம்மில் மகிழ்ந்திடவே (2)
திருப்பலி அருள் பெற விரைகின்றோம்
வாருங்கள் வாருங்கள் அனைவரும் வாருங்கள்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனைப் பாடுங்கள்

ஆலயமணிகள் ஆயனின் குரலென
நம்மை அழைத்தது இறை இல்லம் நாம் நுழைவோம்
விரைந்து வருவோம் கரம் சேர்ப்போம்
அவரின் குரலுக்கு செவிகொடுப்போம்
சுயநலம் அழிந்திட பிறரன்பு பணி செய்ய
இறைவன் வார்த்தையை ஏற்றிடுவோம் - நாம்
இறைவன் வார்த்தையை ஏற்றிடுவோம்

நலிந்தவர் எழுந்திட தாழ்ந்தவர் உயர்ந்திட
விடுதலை முழங்கிட இறையாட்சி முகிழச்செய்வோம்
மனிதம் உலகில் மலர்ந்திடவே
புனிதன் யேசுவின் வழி நடப்போம்
காரிருள் மறைந்திட பேரொளி பாய்ந்திட
புதிய வாழ்வினை புலரச் செய்வோம் - நாம்
புதிய வாழ்வினை புலரச் செய்வோம்
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்