10) அழைக்கும் இறைவன் குரல் கேட்க |
அழைக்கும் இறைவன் குரல் கேட்க ஆலயம் விரைவோம் வாருங்கள் அன்பின் சுவடுகள் பதித்திடவேஇறை குலமாய் இணைந்து வாருங்கள் மீட்பினை நிதம் கண்டிட வான் தேவன் புகழ் பாடுங்கள் பாரெங்கும் அருள் சூழ்ந்திட தியாகத்தின் வழி கூடுங்கள் என்னை அழைத்தார் அவர் கையில் பொறித்தார் கருவில் தெரிந்தாரே அன்பைப் பொழிந்தார் என்னை அள்ளி அழைத்தார் உரிமையாய் தேர்ந்தாரே இருகரம் விரித்து அழைக்கின்றார் இதயத்தில் பொதிந்திட அழைக்கின்றார் திருப்பலி வாருங்கள் உம்மைத் தேடி உமதருள் வேண்டி தாகம் கொண்டேன் நான் உயிர் தந்த உம் உறவினிலே கலந்து மகிழ்வேன் நான் அழிவில்லா வார்த்தையால் வாழ்ந்திடுவேன் திருவுடல் திரு இரத்தம் பருகிடுவேன் திருப்பலி வாருங்கள் |