Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   96) இறைவனின் புது உறவில்  



இறைவனின் புது உறவில் - நாம்
கலந்திட விரைந்திடுவோம்
நிறைவுடன் அவர் புகழை - நாம்
நிதமும் போற்றிடுவோம்

ஆலயம் நுழைந்திடும் வேளையில் - நம்
ஆயனின் குரலைக் கேட்கையிலே
இதயத்தில் நிறைந்திடும் உறவினிலே - நல்
நினைவுகள் தோன்றிடுமே - மனக்
கவலைகள் மறைந்திடுமே மறைந்திடுமே

இறைவன் வாழும் கோவிலிலே - இறை
மனிதர்கள் கூடிடும் பொழுதினிலே
பலியில் தவழ்ந்திடும் உணர்வினிலே - நம்
உள்ளங்கள் உருகிடுமே - புது
உறவுகள் மலர்ந்திடுமே மலர்ந்திடுமே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்