Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

    148) நிறை அருள் வாழ்வு  
நிறை அருள் வாழ்வுப் பயணத்திலே
பேரணியாய் நாம் செல்வோம்
இறைவனின் தியாகப் பலியினிலே
கலந்திடவே நாம் இணைவோம்

அவனியிலே இறைவனுக்காய்
அர்ப்பணம் செய்தவர் பேறு பெற்றோர் - எனும்
அருட் சான்று பகர்ந்திடவே
அன்பர்களே ஒன்று கூடிடுவோம் - 2
அன்பு உள்ளங்கள் நாம் இணைவோம்
இன்ப வெள்ளத்தில் நனைந்திடுவோம் - 2

அன்பரசை அகிலமெங்கும்
பரவிடச் செய்பவர் பேறு பெற்றோர் - அந்த
அருள் வாழ்வு பரவிடவே
தீபங்களாய் நின்று எரிந்திடுவோம் - 2
உண்மை தெய்வத்தை நாம் தொழுவோம்
விண்ணின் செல்வத்தில் திளைத்திடுவோம்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்