Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   83) இறையாட்சி மலர வேண்டும்  


இறையாட்சி மலர வேண்டும் - புது
வாழ்வு மலர வேண்டும்
வார்த்தை மனுவாக - இங்கு
நீதி நிலைக்க வேண்டும்
நிலை மாறுமா கரம் சேருமா
வலுவாகுமே துயர் மாறுமே
நிலை மாறுமே கரம் சேருமே
வலுவாகுமா துயர் மாறுமா
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்

பாலும் தேனும் பொழிந்திடுமே
கானான் கனவு பலித்திடுமே
பாறையில் தண்ணீர் சுரந்திடுமே
மன்னா நமது தரை விழுமே
பாலை நிலங்கள் யாவும் - இனி
பசுமை நிறங்கள் ஆகும்
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்

சிங்கமும் கன்றும் தோழமையில்
சிறுவர் நட்பு பாம்பருகில்
வேலும் வாளும் ஏர்முனையில்
துளிர்ப்புகள் எல்லாம் பூப்பொழிவில்
பாடும் மனங்கள் யாவும் - இனி
பாசம் நிறைந்ததாகும்
விண்ணும் மண்ணும் சேரும் நாட்கள்
விரைவில் நாம் காண்போம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்