Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   188) வருக வருக வருக  

வருக வருக வருக - 2
மீட்பின் பேரொளி தெரிந்தது இன்று
காட்டும் பாதையில் துணிவுடன் நின்று
உயிர் தரும் வார்த்தையில் உவந்து மகிழ்ந்து
இன்று வருக வருக

பழையன யாவும் மறைந்திடவே
புதிய இதயங்களும் மலர்ந்திடவே
இறைவனின் ஆவியின் வலிமையிலே
மடிந்தவைகள் உயர்ந்திடுமே
புலர்ந்திடும் இறைவனி;ன் அரசில் நுழைய
இன்று வருக வருக

வாழ்வினில் நம்பிக்கை வந்தொளிரும்
எளியோர் நிலை உயரும் நாளும் வரும்
அருள் தரும் ஆண்டின் நிலையிதுவே
தன்னலம் போய் பொது நலமே
உறவதன் நிறைவினில் விருந்தை அருந்த
இன்று வருக வருக

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்