Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே  

தந்தன தந்தன தந்தனனா(2)
தன னனனா தன னனனா தன னனனா தன னனனா

ஆனந்த கானங்கள் அன்புடன் இசைத்தே
ஆண்டவர் இல்லம் செல்வோம் - என்றும்
அவனியில் மாந்தர் அன்பினில் மிளிர
அருள் வேண்டி பலியிடுவோம்

உருண்டோடும் வாழ்வில் கரைந்திடும் நாளே
ஒளிபெற்றுத் திகழ வரம் கேட்கிறோம் (2)
கானமும் காற்றும் வேறில்லையே ஆ.ஆ.ஆ..
கானமும் காற்றும் வேறில்லையே
நீயின்றி என் வாழ்வு வேறில்லையே

விடியலின் பனித்துளி மிதிபடவே உம்
விடியலின் கனவை யாம் கண்டிடனும் (2)
மனதினைக் காக்கும் மாண்புருவாஆஆஆ..
மனதினைக் காக்கும் மாண்புருவா
மனங்களைப் பலியிட வருகின்றோம்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்