Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் புத்தொளி வீசிட பூமணம் கமழ்ந்திட  

புத்தொளி வீசிட பூமணம் கமழ்ந்திட புதிய நாள் பிறந்தது
அருள் ஒளி தோன்றிட அகமெங்கும் சூழ்ந்திட
புனித நாள் மலர்ந்தது புதிய மணம் கொண்டு புனித பீடம் சென்று
தூயவர் பலியில் கலந்திடுவோம் (2)

இறைவன் நம்மை அழைத்ததால் நாமும்
இறைவனின் பிள்ளைகள் ஆனோம்
இறைவன் நம்மைத் தேர்ந்ததால்
அரசக் குருத்துவ திருக்கூட்டமானோம்
பறைசாற்றுவோம் அவர் புகழை
பாரெங்கும் ஒலிக்கச் செய்வோம் (2)
வாருங்கள் வாருங்கள் இறைவனைப் புகழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனில் மகிழ்வோம் (2)

இறைவனின் அன்புச் செயலினால் நாமும்
அவரது உடமைகள் ஆனோம்
இறைவனின் அன்பு வார்த்தையால்
அருள் அருவியில் நனைந்தவரானோம்
அணுகிச் செல்வோம் அவர் பாதம்
அழியாத வார்த்தை கேட்போம் (2)
வாருங்கள் வாருங்கள் இறைவனைப் புகழ்வோம்
பாடுங்கள் பாடுங்கள் இறைவனில் மகிழ்வோம் (2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்