163) புது உலகம் படைத்திடவே |
புது உலகம் படைத்திடவே இயேசு அழைக்கின்றார் புது உறவில் புது இதயம் மலர்ந்திட அழைக்கின்றார் - 2 அன்புறவே நம் வழிமுறையாய் அவனி மீதெங்கும் பரவட்டும் - 2 அன்பினால் தன்னைத் தியாகம் செய்திட்ட - 2 அன்பன் நினைவினில் நிலைத்து வாழ்ந்திட வாருங்கள் கூடுங்கள் வள்ளல் இயேசுமுன் பணிந்திடுங்கள் - 2 பணிவாழ்வே நம் செயல் முறையாய் பலரும் பயன் பெற உழைப்போம் - 2 பணிவிடை புரிந்த பரமன் இயேசுவின் - 2 பாதச் சுவடினில் நாளும் நடந்திட |