Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  71) இறை பலியினில்  


இறை பலியினில் இணைந்திடுவோம்
இறைவனில் கலந்திடுவோம்
இதயத்தில் இருப்பவரே
இறைகுலமாய் வருவோம்
இறை மகிமைக்காக உழைப்போம் 2
மண்ணில் மனிதம் மலர இணைவோம்

இறைவன் வார்த்தையில் இல்லம் அமைந்திட
இயேசு வழியில் செல்வோம் 2
உறவு வளம் பெற உண்மை உருப்பெற
உலகில் சாட்சியாவோம்
கல்வாரி பலியின் நினைவே எம்
வாழ்வில் வசந்தம் வருமே
இறை மகிமைக்காக உழைப்போம் 2
மண்ணில் மனிதம் மலர இணைவோம்

ஏழை எளியவர் இறைவன் செய்தியை
ஏற்று மகிழச் செய்வோம் 2
மாறும் உலகில் மாறாதுன் அன்பில்
மாற்றம் கண்டு கொள்வோம்
கல்வாரி பலியின் நினைவே எம்
வாழ்வில் வசந்தம் வருமே
இறை மகிமைக்காக உழைப்போம் 2
மண்ணில் மனிதம் மலர இணைவோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்