64) இளமை இனிமை புதுமை |
இளமை இனிமை புதுமை இராகம் பாடிவருவோம் வானம் இன்று மண்ணில் வர கூடி வருவோம் உலகம் யாவும் ஒன்று உயிர்கள் யாவும் ஒன்று இயேசுவில் அனைவரும் சங்கமிப்போம் அன்பு என்னும் ஆடைகளை நாம் அணிவோம் அண்ணல் இயேசு சுவடுகள் நாம் தொடர்வோம் தூய ஆவி கொடைகளை நாம் பெறுவோம் சேவை செய்யும் உள்ளங்கொண்டு நாம் வருவோம் சாதியில்லை பேதமில்லை இறைபலியில் நீதிவாழும் நேர்மை ஆளும் இறையரசில் வீதியெங்கும் தேவன் நாமம் கூறிடுவோம் ஆதிசபை வாழ்க்கை நெறி வாழ்ந்திடுவோம் |