வருகைப்பாடல்கள் | மணியோசை கேட்டு மகிழ்வோடு |
மணியோசை கேட்டு மகிழ்வோடு கூடி வாருங்கள் இன்னிசை கீதம் முழங்கிட முழங்கிட கூடுங்கள் இறைவன் உறவாகும் இந்த திருப்பலி விருந்தாகும் இறைவன் பலியாகும் இது உன்னத உறவாகும் நிம்மதி தேடி அலைகின்ற நெஞ்சில் ஆறுதல் தருகின்ற ஆலயம் நிறைவான வாழ்வை இகமதில் வாழ அழைக்கின்ற இயேசுவின் ஆலயம் சமத்துவ பலியாகும் இனி சங்கமம் உருவாகும் உழைதிட்ட மனங்கள் ஒன்றென இணையும் இறைமகன் இயேசுவின் பலியிது உயர்வின்றி தாழ்வின்றி சமபந்தி விருந்திலே இணைகின்ற இயேசுவின் பலியிது குடும்பமாய் கோடிடுவோம் திருக் குடும்பமாய் வாழ்ந்திடுவோம் |