வருகைப்பாடல்கள் | இன்னிசை எழுப்பியே |
இன்னிசை எழுப்பியே இறைவனைப் புகழ்வோம் ஆண்டவர் திருமுன் நாம் ஒன்று சேர்வோம் இறைவனின் புகழினை என்றுமே பாடி மகிழ்வுடன் அவருக்கு ஊழியம் செய்வோம் நெஞ்சே இறைவனை வாழ்த்திடுவாயே அவரின் உன்னத செயல் மறவாதே அருளும் இரக்கமும் முடியாய்த் தருவார் நன்மைகளால் என்னை நிறைவுறச் செய்வார் இறைவன் நமது கன்மலையாவார் என்றும் வாழ்வினை வளமுறச் செய்வார் வல்லவர் அவரே வாழ்பவர் அவரே என்றும் உயிராய் இருப்பவர் அவரே |