122)எழுவோம் எழுவோம் |
எழுவோம் எழுவோம் குருவுடன் இணைந்து நல் பலியினில் கலந்திடுவோம் அதிகாலையில் நல்லாசீர் பெற்றிடுவோம் இறைவாழ்வினைப் பகிர்ந்திடுவோம் ஒளிவிடும் சுடர் என நாம் வாழ்ந்து பிறர் வாழ்வினில் ஒளியாய் திகழ்ந்திடுவோம் ஒருமனம் கொண்டு நாம் வாழ்ந்து நல் அமைதியின் உலகினை அமைத்திடுவோம் மணம் வீசும் மலராய் நாம் வாழ்ந்து பிறர் வாழ்விற்கு மகிழ்ச்சியை அளித்திடுவோம் இறையருள் கொண்டு நாம் வாழ்ந்து அவர் நாமத்தை உலகினில் பரப்பிடுவோம் |