Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

   119)உன் நினைவில் சங்கமிக்கும்  
உன் நினைவில் சங்கமிக்கும் என் இதயம் - அது
உன் வழியைப் பின் தொடரும் வாழ்வில் நிதம் - 2

உன் உறவினில் விழி திறந்தது
உண்மை அன்பின் சுவை தெரிந்தது
தன்னலத்தில் தளை அறுந்தது எந்தன் யேசுவே
உன் வழியில் நான் நடந்திட
உன் பணியினை நான் தொடர்ந்திட
உன் உடலும் குருதியுமே உறுதி தந்தது
உந்தன் அன்புக்கெல்லை இல்லையே
உன் நினைவில் துன்பமில்லையே

வழி தவறிய ஆடென
உனதருள் வழியினை நான் மறந்திட
என்னைக் காண கல்லும் முள்ளும் அலைந்து தேடினாய்
ஒரு கிளையென நீ இருந்திட
அதில் கொடியென நான் படர்ந்திட
பொங்கும் அன்பு நெஞ்சினிலே என்னை மூடினாய்
உந்தன் அன்புக்கெல்லை இல்லையே
உன் நினைவில் துன்பமில்லையே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்