Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

    170) புதிய வானகமும்  
புதிய வானகமும் புதிய வையகமும் மலரும் நாளிது
புதிய இதயமும் புதிய ஆவியும் அணியும் நேரமிது
அலையென எழுவோம் அணியெனத் திரள்வோம்
ஆண்டவர் இயேசுவைப் புகழ்வோம் (2)

இறைவனின் சொந்தப் பிள்ளைகள் நாம்
இறையரசின் குருத்துவக் குலமும் நாம் (2)
உரிமை வாழ்விலே நமை அழைத்தார் - இந்த
உலகம் வாழவே நமைப் பணித்தார்
உறவின் பாலங்கள் நாம் அமைப்போம் - இங்கு
உருகும் விழிகளை நாம் துடைப்போம் - 2

தம்மையே இயேசு பலியெனத் தந்து
விடுதலை வாழ்வைத் தந்துள்ளார் (2)
கருணை இறைவனில் நாம் நிலைப்போம் - மனக்
கதவு நிலைகளை நாம் திறப்போம்
கரங்கள் இறைவனின் பலிக்கானால் - இங்கு
கடவுள் அரசுதான் பிறக்காதோ - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்