வருகைப்பாடல்கள் | இறைவனின் ஆவி நிழலிடவே |
இறைவனின் ஆவி நிழலிடவே இகமதில் அவர் புகழ் பரவிடவே நம்மை அழைத்தார் அன்பில் பணித்தார் - அவர் பணிதனைத் தொடர்ந்திடவே (2) வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும் அடிமைகள் விடுதலை அடைந்திடவும் (2) ஆண்டவர் அரசில் துயரில்லை என வானதிர பறைசாற்றிடவும் குருடரும் ஒளியுடன் நடந்திடவும் குவலயம் நீதியில் நிலைத்திடவும் (2) அருள் நிறை காலம் அவனியிலே வருவதை வாழ்வினில் காட்டிடவும் |