Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

வருகைப்பாடல்கள் திருக்குலமே வாருங்கள்  

ஸநிதப நிகபதநிஸநித தநி ஸநித த ......... ஸநிதபநிஸ

திருக்குலமே வாருங்கள் திருப்பலியில் கூடுங்கள்
இறைவன் செய்த நன்மைகளை நினைத்துப்பாருங்கள்
மகிழ்வுடனே நன்றி பலி செலுத்த வாருங்கள் -2

நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத தெய்வம்
தன்னையே பலியாக தருகிறார் -2
அவரின் தியாகத்தால் வாழ்வு பெறுகிறோம் -2
அவரன்பு பிள்ளைகளாவோம்
அவர் அன்பின் சாட்சிகளாவோம்

உண்மையாக தேடும் அனைவருக்கும் அருகில்
ஆண்டவர் இருக்கின்றார் வாருங்கள் -2
மகிழ்ச்சியோடு நாம் அவரை நாடுவோம் - 2
நினைப்பதெல்லாம் நிறைவேற்றுவார்
நன்மைகளால் நம்மை நிரப்புவார்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்