|
|
திருச்சபையின் திருவருள்
அடையாளங்கள் என்றால் என்ன?
ஆன்மாவிற்கு அருள் கிடைக்க கிறீஸ்துவினால் ஏற்படுத்தப்பட்ட உள்ளாந்த
மனிதருள் வெளி அடையாளங்களே திருவருள் அடையாளங்கள் ஆகும். |
திருவருள் அடையாளங்கள்
எப்பொழுதும் அருளை வழங்குமா?
திருவருள் அடையாளங்களை தகுந்த முறையில் பெறும் ஒவ்வொருவருக்கும்
அருள் நிச்சயம் கிடைக்கும். |
திருவருள் அடையாளங்கள் எப்பொழுது அருள்
வழங்கும் சக்தியுடையனவா கின்றன?
கிறீஸ்துவின் விலைமதிப்பில்லாத இரத்தத்தின் சிறப்புகள் நம் ஆன்ம
ஈடேற்றத்திற்கு உதவும்போது இச்சாதனங்கள் அருள் வழங்கும் சக்தியுடையனவாகின்றன. |
திருவருள் அடையாளங்கள்
பெற நாம் மிகுந்த ஆர்வம் கொள்ள வேண்டுமா?
ஆம் ஏனெனில் அவைகள் நம் ஆன்மா மீட்பு அடைவதற்கு முக்கியமான சாதனங்களாகவும்,
வழிகளாகவும் உள்ளதால். |
திருவருள் அடையாளங்கள் யாவை?
1) திருமுழுக்கு (ஞர்னஸ்நானம்)
2) உறுதிப்பூசுதல்
3) நற்கருணை
4) ஒப்புரவு
5) நோயில்பூசுதல்
6) குருத்துவம்
7) மொழி
|
|
திருமுழுக்கு என்றால் என்ன?
ஜென்ம பாவத்தையும் கர்மபாவத்தையும் போக்கி, நம்மைக் கடவுளுக்கும்
திருச்சபைக்கும் பிள்ளைகளாக்குகின்ற அருள் அடையாளம்.
(1கொரி:6:11) |
|
உறுதிப்பூசுதல் என்றால் என்ன?
நம்மை சத்திய வேதத்தில் திடப்படுத்துவதற்காக, தூய ஆவியையும்,
அவருடைய அருட்கொடைகளையும் நமக்குக் கொடுக்கின்ற அருள் அடையாளம்
(யோவா:15;26) |
|
நற்கருணை என்றால் என்ன?
அப்பத்தின் குணங்களுக்குள்ளேயும், திராட்சை இரசத்தின் குணங்களுக்குள்ளேயும்
இயேசுக்கிறிஸ்துநாதருடைய திருஉடலும், திருஇரத்தமும், திருஆன்மாவும்
தெய்வத்தன்மையும் அடங்கியிருக்கின்ற அருள் அடையாளம்
(1கொரி:11:23-25) |
|
ஒப்புரவு என்றால் என்ன?
திருமுழுக்கிற்குப்பின் நாம செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும்,
இனி பாவம் செய்யாமல் இருக்க அருளையும் அளிக்கின்ற அருள் அடையாளம்
(2கொரி:5:18-21) |
|
நோயில்பூசுதல் என்றால் என்ன?
நோயாளிகளிடம் உள்ள பாவங்களுக்கு பரிகாரமாகவும், அவர்களுடைய ஆன்மாவிற்கும்
உடலுக்கும் ஆறுதலாகவும் உண்டாக்கப்பட்ட அருள் அடையாளம்
(யாக்:5:14) |
|
குருத்துவம் என்றால் என்ன?
திருப்பலி நிறைவேற்றவும், அருள் அடையாளங்களை அளிக்கவும் வழி
செய்கின்ற அருள் அடையாளம் (எபி:9:11-14) |
|
மொழி
என்றால் என்ன?
ஒரு ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் தம்மைக் கையளிக்கவும்,
பிரமாணிக்கமாக வாழவும், தங்கள் பிள்ளைகளை இறைவழியில் வளர்க்கவும்,
வேண்டிய அருளைத் தருகின்ற அருள் அடையாளம் (எபே:5:;21-33) |