Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 வருகைப்பாடல்கள்

  78) இறைமகன் இயேசு  


இறைமகன் இயேசு அழைக்கின்றார்
இகத்தினில் நமக்கு வாழ்வளிக்க (2)
இறைமகன் இயேசு அழைக்கின்றார்
அல்லேலூயா அல்லேலூயா - 4

உயிரும் உணவும் நானே என்றார்
எனை உண்டால் வாழ்ந்திடுவீர் (2)
உலகின் ஒளியும் நானே என்றார்
உண்மையின் வழியும் நானே என்றார்
உலகினில் நமக்குப் புகலிடம் இவரே - 2
உன்னத இயேசுவின் பாதம் பணிவோம்

உன்னை அன்பு செய்வது போல
அயலானை நேசி என்றார் (2)
உலகினில் எளியோர்க்கு செய்ததெல்லாம்
எனக்கே செய்தீர் என்றுரைத்தார்
உலகினில் நமக்குப் புகலிடம் இவரே - 2
உன்னத இயேசுவின் பாதம் பணிவோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்