142) தேவனின் ஆலயம் |
தேவனின் ஆலயம் நுழைந்திடுவோம் - நம் தேவைகள் அனைத்தையும் நினைத்திடுவோம் நம் இயேசுவிடம் கூறிடுவோம் தேவனின் ஆலயம் நுழைந்திடுவோம் தேற்றும் இறைவன் அவர் தான் என்று - நாம் தேடி வந்தால் தினம் அருள் பொழிவார் (2) உயிர்களையே காத்திடுவார் உண்மைகளை அவர் உரைத்திடுவார் (2) அந்த மேய்ப்பனிடம் வருக மாபரன் ஆசீரைப் பெறுக (2) குறைகளையே அகற்றிடுவார் நிறைவுகளை அவர் பொழிந்திடுவார் (2) அந்த இறைவனிடம் வருக தேவனின் ஆசீரைப் பெறுக (2) |