95)இறைவனின் தியாகப்பலியினிலே |
இறைவனின் தியாகப்பலியினிலே கலந்திட வருவீர் இறைமக்களே (2) இறைமகன் அன்பினில் நனைந்திட மகிழ்ந்திட அவர் தரும் நற்செய்தி பகிர்ந்திட வாழ்ந்திட (2) வருவீர் வருவீர் இறைமக்களே பெறுவீர் பெறுவீர் அவரன்பையே அருள்தரும் இறைவனின் வார்த்தையைக் கேட்போம் ஆறுதல் அடைந்திடுவோம் சுமைகள் சுமந்து சோர்ந்திடும் - போது அவர் பதம் நாடிடுவோம் (2) வாழ்வினில் உண்மையும் வழியினில் ஒளியும் அவர் தரும் அருள் வரங்கள் (2) இந்த வரங்களைப் பெற்றிடவே திருப்பலியினிலே கலந்திடுவோம் ஆ.....ஆ.... |