59) இரக்கத்தின் இறைவனின் |
இரக்கத்தின் இறைவனின் இறைகுலமே இணைவோம் பலி செய்து மகிழ்வோம் இகத்தினில் இறைவனின் புகழ்ச்சிகளை இன்றும் என்றும் சாற்றிடுவோம் மண்ணின் மாந்தரில் நம்மை - சொந்த மக்களாய் தேர்ந்து கொண்டார் (2) கண்ணின் இமைபோல் என்றும் - நம்மை கருணையில் காத்து வந்தார் (2) பாடிப்புகழ்ந்திடுவோம் பலியில் பலன்பெறுவோம் - 2 பிரிந்து மறந்திட்ட போதும் - செய்த உடன்படிக்கையை அவர் நினைத்தார் (2) வருந்தி சோர்ந்திட்ட நேரம் - உடன் இருந்து விருந்தும் அளித்தார் (2) பாடிப்புகழ்ந்திடுவோம் பலியில் பலன்பெறுவோம் - 2 |