50) இதயம் தேடி இறைவன் |
இதயம் தேடி இறைவன் அழைக்க இனிய பலியில் உன்னை இணைக்க அழைக்கிறார் யேசு உன்னை அழைக்கிறார் (2) எழுந்திடு இறைகுலமே பணிந்திடு அவர் பதமே உள்ளம் மகிழ உவகை பொங்க அழைக்கிறார் உள்ளம் சோர்ந்து போனவரே வாருங்கள் - வாருங்கள் உறவை இழந்து வருந்துவோரே வாருங்கள் - வாருங்கள் (2) உறவாக யேசு அழைக்க வாருங்கள் உன்னத வாழ்வைத் தந்திடுவார் வாருங்கள் (2) உறவும் நிறைவும் வந்திட வந்திட உணவாய்த் தன்னை தந்திட தந்திட உன்னத தேவன் அழைக்கிறார் வாருங்கள் வாழ்வை இழந்து வருந்துவோரே வாருங்கள் - வாருங்கள் வாடும் நெஞ்சைத் தேற்றிடவே வாருங்கள் - வாருங்கள் (2) வாழ்வாக யேசு அழைக்க வாருங்கள் வசந்தம் வாழ்வில் தந்திடுவார் வாருங்கள் (2) வார்த்தையாக வாழ்வு வழங்க வானின் அமுதை நம்மில் வழங்க வள்ளல் யேசு அழைக்கிறார் வாருங்கள் |